Friday, March 17, 2023

ஹிந்தி தெரியாது போடா

ஹிந்தி தெரியாது போடா... என்ன தில்லு இருந்தா என்கிட்ட ஹிந்தில பேசுவ... Be@ma@ni... கலீஜ் ஆயிடுவ... என் கிர்தா பார்த்தா தெர்ல? உன் தௌலத் எல்லாம் இங்க வேணாம்... மாமூல்  காண்டி கரீட்டா வர்ல டப்பா டான்ஸ் ஆடிடும்... என்னமோ ஜபர்தஸ்டா  அந்த பஜாரி கிட்ட நம்மள பத்தி போட்டு கொடுக்குற... என்ன அங்க சொன்னா ஜகா உட்ருவேனா... அவயெல்லாம் கோதாலயே இல்ல... நமக்கு மால் வசூல் ஆவுறது தான் முக்யம்... சும்மா தமாசு காட்டிட்டு இருந்த, காலி பண்ருவேன்... எத்தனையோ லட்டி தோட்டா எல்லாம் பாத்தவன்டா நா... இன்னிக்கு கூட பிரியாணிக்கு ரைத்தா கொடுக்கலனு ஒர்த்தன் மூஞ்சில மாஞ்சா போட்டேன். நாங் காண்டி சாமான கைல எடுத்தேன்... பேஜாராயிடும்... நீயெல்லாம் எனக்கு சோட்டா பச்சா... துஜே முஜ்கோ பதா நஹி... மே படா ஆத்மி ஹுன். முஜ்ஸே ஹிந்தி மேம் பாத் மத் கரோ... ஸம்ஜே...